மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
ரக்ஷா பந்தனையொட்டி, ஆளுநரை பெண்கள் சந்தித்து ராக்கி கட்டினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் உள்ள குண்டர்களால் பெண்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதான நம்பிக்கையை தாங்கள் இழந்துவிட்டதாக, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் கூறியது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், அவர்களது உணர்வை தாம் மதிப்பதாக குறிப்பிட்டார்.