மாநிலங்களவை தேர்தலையொட்டி, ஹைதராபாத்தில் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தெலங்கானாவிலிருந்து தேர்வாகும் மாநிலங்களவை உறுப்பினர்களில் ஓரிடம் காலியாக இருந்த நிலையில், அதற்கு அபிஷேக் சிங்வி பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவைக் குழு தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்த நிலையில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.