சமூக வலைதளத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து யாராவது கருத்து பதிவிட்டால், அவரை அடையாளம் கண்டு விரலை உடைத்து விடுவதாக அம்மாநில அமைச்சர் உதயன் குஹா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
கொல்கத்தா அரசு பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல சமூக வலைதளத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து பலரும் கருத்து பதிவிட்டனர்.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில அமைச்சர் உதயன் குஹா, அரசு பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டுமென யாராவது சமூக வலைதளத்தில் பதிவிட்டால், அவரை அடையாளம் கண்டு விரலை உடைத்து விடுவேன் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் வங்கதேசத்தை போன்ற சூழல் மேற்கு வங்கத்தில் நிலவ அனுமதிக்க மாட்டோம் என்றும் அமைச்சர் உதயன் குஹா தெரிவித்தார். மம்தா பானர்ஜியை விமர்சிப்பவர்களின் விரலை உடைப்பதாக அவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.