கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை கண்டித்து புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்விவகாரத்தை கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.