புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு நடப்பாண்டில் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.