கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் அவரது உடலில் கன்னம், உதடு, மூக்கு, கழுத்து, கை, மூட்டு என வெளிப்புறத்தில் 16 காயங்களும், உட்பகுதியில் ஒன்பது காயங்களும் பதிவாகியுள்ளன.
மேலும், கழுத்தை நெரித்து பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதும், வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது.