டெல்லியில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகரான டெல்லியில் கனமழை பெய்து வருகிறது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான டெல்லி ஐடிஓ, பிகாஜி காமா, விஜய் சவுக் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பாய்ந்தோடி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்டோ சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ நீரில் மூழ்கியது. டெல்லி ஆசிரம பாலம் சாலையில் தேங்கியுள்ள வெள்ளநீரில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.