மூன்று நாள் பயணமாக போலந்து, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்காக பிரதமர் மோடி நாளை இந்தியாவிலிருந்து புறப்படுகிறார்.
ரஷ்யா, உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ம் தேதி உக்ரைன் செல்கிறார். முன்னதாக நாளை போலந்துக்கு பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது, போருக்கான தீர்வு பேச்சுவார்த்தை தான் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் உக்ரைன் பயணம் உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.