முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80ஆவது பிறந்த நாள்விழா நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் நனைந்தபடி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.