தனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3 புள்ளி 9 ஏக்கர் நிலத்தை மைசூருநகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. அதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருந்ததால், புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு, மனைவிக்கு நிலம் ஒதுக்கிய வழக்கு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றும், அதில் எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை எனவும் கூறி சித்தராமையா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.