அரசியல் வன்முறைக்கு அமெரிக்காவில் இடமில்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
வயது முதிர்வு, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவித்தார்.இந்நிலையில், சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய கமலா ஹாரிஸ், அதிபர் ஜோபைடனுக்கு என்றும் நன்றியுள்ளவராக இருப்பேன் என கூறினார்.