பாம்பன் புதிய ரயில்வே தூக்கு பாலம் ரசாயன வர்ணம் பூசப்பட்டு மிகவும் ரம்யமாக காட்சி அளிக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடல் பகுதியை இணைக்கக்கூடிய பாம்பன் புதிய ரயில்வே தூக்கு பாலம் 550 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தூக்கு பாலம் பணிகள் நிறைவடைந்து, தற்போது பாலத்தை தூக்கும் 650 டன் கொண்ட லிப்ட் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், புதிய ரயில்வே தூக்கு பாலம் துருப்பிடிக்காத வகையில் 2 கோடி செலவில் ரசாயனம் வர்ணம் பூசுப்பட்டு வருகிறது. இந்தப் பணி 20 நாட்களுக்குள் முடிவடைந்துவிடும் என்றும், அதன் பிறகு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அக்டோபர் 1ஆம் தேதி திறக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.