திண்டுக்கல்லில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், மலைக்கோட்டை அருகே குடைப்பாரைப்பட்டி பகுதியில் உள்ள பாறையை கருப்புசாமி என நினைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
பழனியை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் முனைவர் நாராயணமூர்த்தி இந்த பாறையை ஆய்வு செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பாறையானது பெருங்கற்கால சின்னமாக விளங்குகிறது என தெரிவித்தார்.
இது பண்டைய காலத்தில் உயிரிழந்த போர் வீரனுக்காக கட்டப்பட்ட ஒழுங்கற்ற நினைவு சின்னம் என குறிப்பிட்ட அவர், பாறை சின்னத்தின் சிறப்பே கல்லாங்குழிகள் செதுக்கப்பட்டுள்ளது தான் என கூறினார். மேலும், இந்த கல்லாங்குழிகள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதுமக்களின் அடையாளமாக கருதப்பட்டதாக தெரிவித்தார்.