கோவை மாவட்டம் அன்னூர் அருகே திருட்டு வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் தப்பியோட முயன்றபோது பள்ளத்தில் விழுந்த இருவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.
கோவில்பாளையத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக ரவீந்திரன், நந்தகுமார், சிராஜுதீன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கொள்ளையின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற ரவீந்திரன், நந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது தப்பியோட முயன்று பள்ளத்தில் விழுந்த இருவருக்கும் கால்முறிவு ஏற்பட்டது.