சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் முடக்கப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கிக் கணக்கை செயல்பாட்டு கொண்டு வர அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
1990 ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை வங்காளதேசத்தின் பிரதமராக கலிதா ஜியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே ராணுவ ஆதரவு பெற்ற காபந்து அரசாங்க குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2007 ஆம் ஆண்டு கலிதா ஜியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
கலீதாவின் வழக்கறிஞரிடமிருந்து கணக்குகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர கலிதா தரப்பிடம் விண்ணப்பம் பெற்றதாக மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.