‘வாழை’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குநர் பாலா, பேச வார்த்தையின்றி மாரி செல்வராஜை கட்டியணைத்து அவரது கைகளை பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரையுலகின் பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின் மற்றும் நடிகர்கள் சரத்குமார், சூரி உள்ளிட்ட பலரும் ‘வாழை’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.