திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே திமுக ஒன்றிய குழு தலைவர் வீட்டின் அருகே பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களில் பேட்டரி இணைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்தால் பதற்றம் நிலவியது.
செங்குன்றம் அடுத்த திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரான திருமாலின் மனைவி தங்கமணி புழல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டின் வெளியே கழிவு நீர் செல்லும் கால்வாயின் மீது பெட்ரோல் நிரப்பப்பட்டு பேட்டரியுடன் இணைக்கப்பட்ட 3 கேன்கள் இருந்ததைக் கண்டு அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேட்டரியுடன் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.