தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த ஒப்பந்த தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாணாதுறை பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சியில் ராஜேந்திரன் என்பவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கிணற்றுக்கட்டையில் உட்கார்ந்திருந்தபோது அவர் எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















