திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சாலையோரம் உள்ள மரத்தில் வடமாநில இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரத்தில் வடமாநில இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த நபர் தடபெரும்பாக்கம் சிமெண்ட் கடை ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக திடீரென காணாமல்போனதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.