திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை சேர்ந்த சன்னி, சஞ்சய், பிரீத்தி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர்.
கழுத்து, கை என உடல் முழுவதும் தங்க ஆபரணங்களை அணிந்து வந்த இந்த குடும்பத்தினரை பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.