ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்களையும் வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அதே நாளில் நாட்டை விட்டும் வெளியேறினார்.
தற்போது முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சிபுரிந்து வரும் நிலையில் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் எம்.பி.க்களின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்களையும் ரத்து செய்வதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.