ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சதிஷ் குமார் தோல்வியை தழுவினார்.
யோகோஹமாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏராளமான வீரர் வீராங்கணைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் சதீஷ் குமார் தாய்லாந்து வீரர் கண்டாபோன் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சதிஷ் குமார் 21-18, 18-21, 8-21 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.