திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காரின் டயர் வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டு கார் சேதமடைந்தது.
கொலமஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த பாலசந்திரன், தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சென்றபோது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. அப்போது காரில் இருந்து குடும்பத்தினர் வேகமாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.