தேனி அருகே கர்ப்பிணி மனைவி மற்றும் 5 வயது மகளை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த உலகத்தில் வாழப்பிடிக்கவில்லை எனவும், அதனால் தன் கர்ப்பிணி மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு, அதுபோலவே அவருடைய மனைவி மற்றும் குழ்ந்தையை கத்தியால் கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ளார்.
பிறகு தானும் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.