வங்கதேசத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட இந்தியா தான் காரணம் என வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
வங்கதேசத்தின் கிழக்கு எல்லையோர மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு இந்தியாவே காரணம் என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
வங்கதேச ஊடகங்களின் குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், திரிபுராவின் கும்டி ஆற்றின் மேல்பகுதியில் உள்ள டம்பூர் அணை திறக்கப்பட்டதால் வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வெளியானசெய்தி கவலையளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடகங்களில் வெளியான தகவல் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும், கும்டி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையே வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.