தஞ்சாவூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் எவ்வித அச்சமுமின்றி செல்லும் குற்றவாளிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பாப்பநாடு பகுதியில் இளம்பெண்ணை கொன்றுவிடுவதாக மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகள் எந்த வித பயமும் இன்றி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.