தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற செவிலியரை போலீசார் கைது செய்தனர்.
கிட்டனஅள்ளி பகுதியில் சட்ட விரோதமாக சிசுவின் பாலினம் கண்டறியப்படுவதாகவும், கருக்கலைப்பு நடைபெறுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு, தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊரக நலப்பணிகள் இணைஇயக்குநர் உள்ளிட்ட குழுவினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி கர்ப்பிணி ஒருவர் அங்கிருந்த வீட்டின் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாத்திரையை உடனடியாக அகற்றிய அதிகாரிகள், கருக்கலைப்பு செய்ய முயன்ற செவிலியர் சித்ராதேவியை கைது செய்தனர்.
இவர் கருவின் பாலினம் கண்டறிய 15 ஆயிரம் ரூபாயும், அதை கலைக்க 30 ஆயிரம் ரூபாயும் பெற்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.