தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் 2008-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ல் கும்பாபிஷேகம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. அதனைதொடர்ந்து இன்று 16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை காண தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். பாஜக மாநில துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.