அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வெள்ளாள தெருவை சேர்ந்த மணிகண்டன் – ரேணுகாதேவி தம்பதியினர் சின்னவளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப்பொருட்கள், 30 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ரேணுகாதேவி புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.