தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் 14ம் தேதி முதல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒகேனக்கலில் நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளதால் 39 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.