செங்கல்பட்டு மாவட்டம் செங்காட்டூர் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த கிராமத்தில் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணி புரியும் மக்களிடம் ஊராட்சி மன்ற தலைவி ஆர்த்தி மற்றும் அவருடைய கணவர் செல்வக்குமார் ஆகியோர் மாதம்தோறும் பணம் தரவேண்டும் எனக் கூறியதாகவும், இல்லையென்றால் வேலை இல்லை எனவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து துறை சார்ந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.