தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்ட புனித நீர் கோயில் கோபுரங்களில் ஊற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.