விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்தார்.
சுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்த குருமூர்த்தி ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பயிற்சி பள்ளிக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக குருமூர்த்திக்கும், பிற ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் குருமூர்த்தியின் அலுவலகத்துக்குள் புகுந்த பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சிலர் அவரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.