குஜராத் மாநிலம், சூரத்தில் மெட்ரோ கட்டுமானப் பணியின்போது கிரேன் சரிந்து அருகில் உள்ள கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
சூரத் பகுதியில் மெட்ரோ கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கட்டடத்தின் மீது இயந்திரம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து மீட்புக்குழுவினர் கூறுகையில், கிரேனை பயன்படுத்தி கனமான பொருளை தூக்கும்போது அது கட்டடத்தின் மீது சரிந்து விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்.
ஆளில்லா கட்டடத்தின் மீது இயந்திரம் விழுந்ததால் உயிர் தேசம் ஏற்படவில்லை எனக்கூறியவர்கள், இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகக் கூறினர்.