கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை, பள்ளி கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை கல்வி துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எடுப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் விவகாரம் தொடர்பாக அதிமுக நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவித்த நிலையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.