மத்திய அரசின்கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா உடையில் மாற்றம் கொண்டுவர மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி நிறுவனங்களுக்கு சுகாதார அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில்,
மத்திய அரசுக்கு உட்பட்ட மருத்துவ கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவின்போது தற்போது கருப்பு நிற கயிறும் தொப்பியும் பயன்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி,
இந்த உடை ஐரோப்பாவில் இடைக்காலத்தில் தோன்றியது என்றும், காலனியாதிக்க நாடுகளில் இந்த உடை பின்பற்றப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய காலனியாதிக்கத்தைக் குறிக்கும் பட்டமளிப்பு விழா உடையை மாற்றுவதற்கான தருணம் வந்துவிட்டதாகவும், மாநிலங்களின் பாரம்பரியத்துக்கு ஏற்ப பட்டமளிப்பு விழாவின்போது உடையணிய பரிந்துரைப்பதாகவும் அந்த சுற்றறிக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.