இந்தியா- இலங்கை கூட்டு ராணுவ பயிற்சியின் ஒருபகுதியாக ஹெலிகாப்டரிலிருந்து கயிறு மூலம் மரத்தில் இறங்கி, இருநாட்டு ராணுவ வீரர்களும் ஒத்திகை பார்த்தனர்.
இருநாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி இலங்கை மாதுரு ஓயா ராணுவ பள்ளியில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பயிற்சியானது இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், வெடிகுண்டை கண்டறிந்து அதை செயலிழக்க செய்வது தொடர்பாக இருநாட்டு ராணுவ வீரர்களும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஹெலிகாப்டரிலிருந்து கயிறு மூலம் மரத்தில் இறங்கி இந்திய, இலங்கை ராணுவ வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.