உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இந்தியா – உக்ரைன் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முன்னதாக ஏறத்தாழ 10 மணிநேர ரயில் பயணத்துக்குப் பின்னர், உக்ரைன் தலைநகர் கீவ் நகரை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உக்ரைன் அரசு சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1991-இல் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உக்ரைன் இறையாண்மைமிக்க தனி நாடான பின், இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.