ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில், அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, ராம் மாதவ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் வரும் 18-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.