கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சீல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெண் மருத்துவர் பயிற்சி பெற்றுவந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதில் 5 பேர் மருத்துவர்கள் என்பதும், உயிரிழந்த பெண்ணுடன் அமர்ந்து சம்பவத்துக்கு முந்தைய தினம் இரவு அவர்கள் உணவு உட்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.