கிருஷ்ணகிரியில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை அசோக்குமாரும் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தந்தை, மகன் என இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்தது சந்தேகத்தை கிளப்புவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர். இதனிடையே சிவராமனின் தந்தை சாலையில் சென்ற போது உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.