சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜி விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களையும், ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை ஒருவாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், செந்தில் பாலாஜி வழக்கில் நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு அரசு வழக்கறிஞர் பெயரையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்தனர்.