டெல்லி மதுபானக்கொள்கை வழக்கில் சிபிஐ கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
அரவிந்த் கெஜ்ரிவால் மீதான மற்றொரு வழக்கு தொடா்பாக மனுதாக்கல் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் தருமாறு சிபிஐ தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்சல் புயான் ஆகியோர் அடங்கிய அமா்வு சிபிஐக்கு கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் மறு விசாரணை வரும்வரை சிறையில் இருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.