அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 26-ம் தேதி நியூயார்க்கில் தொடங்கி நடைபெற உள்ளது.
இதில் யார் யாருடன் மோதுவார்கள் என்பதை குலுக்கல் முறையில் அதிகாரிகள் தேர்வு செய்தனர். பெண்கள் பிரிவினருக்கான போட்டியில் துனிசியா நாட்டை சேர்ந்த முன்னணி வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலகியதாக கூறப்படும் நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.