மத்திய தொழிலக பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரலாக ராஜ்வீந்தர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவர் பதவியில் நீடிப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல, எல்லைப் பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரலாக தல்ஜித் சிங் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை பணியில் நீடிப்பார் என கூறப்படுகிறது.
நேபாளம் – பூட்டான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியா எல்லைப் பாதுகாப்புப் படையான சசாஸ்திர சீமா பால் இயக்குநர் ஜெனரலாக தல்ஜித் சிங் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.