இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ள நாடுகளில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாட் ஏற்கனவே நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி பாலிஸ்டிக் ஏவுகணை கப்பல் தனது சேவையை தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் சுமார் 112 மீட்டர் நீளமும் 6 ஆயிரம் டன் எடையும் கொண்டது. இந்த கப்பலின் மேற்பகுதியில பதியப்பட்டுள்ள அணு உலை, நீரின் மேற்பரப்பிலும், நீரில் மூழ்கும்போது அதிகளவில் சக்தியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
மேலும், நீர்மூழ்கிக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ள செங்குத்து குழாய்கள் மூலம் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் வல்லமைப் படைத்தது என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.