வணிக பயப்பாட்டுக்கான சிலிண்டர் விலை 38 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 855 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் அடையும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படும்.
அந்தவகையில், 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை கடந்த மாதம் 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்த நிலையில், இந்த மாதம் 38 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 855 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.