ஈடு இணையற்ற வீரம், அசைக்க முடியாத உறுதியின் உருவகம் பூலித்தேவன் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகாழாரம் சூட்டியுள்ளார்.
பூலித்தேவனின் 309வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :
பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது. ஈடு இணையற்ற வீரம், ஒருமைப்பாடு மற்றும் அசைக்க முடியாத உறுதியின் உருவகமான அவரது தொலைநோக்கு மற்றும் துணிச்சல்மிகு தலைமை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்க்க வைத்தது மட்டுமின்றி விடுதலைக்கான இடைவிடாத போராட்டத்தில் தலைமுறைகளை ஒன்றிணைக்கவும் தூண்டியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.