விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மொட்டை மலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன.
இதில் மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.