மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே மேற்கு வங்கத்தில் மற்றுமொரு பாலியல் தொல்லை சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஹவுரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமியை ஸ்கேன் எடுக்கும் அறையில் பூட்டி, அமன் ராஜ் என்ற லேப் டெக்னீஷியன் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான சிறுமி, தனது பெற்றோரிடம் விவரத்தைக் கூறி, போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில், அமன் ராஜை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே மேற்குவங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றம்சாட்டிய பாஜக, சிறுமிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து போராடப் போவதாக அறிவித்துள்ளது.